சீனா: "நிறுவனம் சொல்லும் நேரத்தில்தான் கழிவறையைப் பயன்படுத்தணும்" - ஊழியர்களுக்கு நூதனக் கட்டுப்பாடு
தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் வேலை பார்க்கும் நேரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்கள் கழிவறை பயன்படுத்தும் நேரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெற்கு சீனாவில் உள்ள ஒரு நிறுவனம்.
போஸான் மற்றும் குவாங்க்டோங் மாகாணத்தில் அமைந்துள்ள த்ரீ பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் கம்பெனியானது கழிவறை பயன்பாட்டு மேலாண்மை விதி ஒன்றைப் பிப்ரவரி 11-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த விதியின்படி, தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் மட்டுமே கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாகக் காலை 8 மணிக்கு முன்பு, 10:30-10:40, நண்பகல் 12:00 -1:30, மாலை 3:30-3:40 மற்றும் 5:30-6:00 மணி வரை, மேலும் கூடுதல் நேரம் பணிபுரிபவர்கள் இரவு 9 மணிக்கு மேல் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய இடைவேளைகளைத் தவிர வேறு நேரங்களில் ஊழியர்கள் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அதிகபட்சமாக 2 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஊழியர்கள் யாரேனும் அவர்களின் உடல் நிலையின் காரணமாக அலுவலகத்தால் ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தவிர வேறு நேரங்களில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் குறிப்பிட்ட மருத்துவத் துறையினர் இடம் இருந்து சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதலாக நேரம் செலவிட்டால் அதற்கு ஏற்றவாறு அவர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை எல்லாம் ஊழியர்கள் சரிவரப் பின்பற்றுகிறார்களா என்பதை கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும், இந்த விதிகளை மீறும் ஊழியருக்கு 100 யுவன் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளைச் சோதனை திட்டமாகப் பிப்ரவரி மாதம் முழுவதும் ஊழியர்கள் கடைப்பிடிக்குமாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது. மார்ச் ஒன்றிலிருந்து இந்த விதிகள் நிரந்தரமாக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play