செய்திகள் :

Dhoni : ``பட்டர் சிக்கனும் பட்டர் பனீரும் ஒன்றல்ல..." - வைரலாகும் தோனியின் ஃபேவரைட் டிஷ் வீடியோ

post image

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தோனியை எந்த அளவுக்கு தெரியுமோ, அதே அளவுக்கு அவர் ஒரு சிக்கன் பிரியர் என்றும் தெரியும். அவரே பல இடங்களில் அதைக் கூறியிருக்கிறார். முன்னாள் இந்தியா வீரர் ராபின் உத்தப்பா கூட, ``ரெய்னா, இர்பான் பதான், ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா, முனாஃப் படேல், தோனி மற்றும் நான் ஹோட்டலுக்கு சென்றால், டால் மக்னி, பட்டர் சிக்கன், ஜீரா ஆலு, கோபி மற்றும் ரொட்டிகளை ஆர்டர் செய்வோம்.

தோனி - சஞ்சு சாம்சன்

சாப்பாடு விஷயத்தில் தோனி கண்டிப்பானவர். பட்டர் சிக்கனில் கிரேவியை மட்டும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுவார். சிக்கன் சாப்பிடும்போது ரொட்டி சாப்பிட மாட்டார். சாப்பிடும் விஷயத்தில் அவர் மிகவும் வித்தியாசமானவர்." என்று முன்பு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் தோனியும் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பட்டர் சிக்கன் குறித்து தோனி பேசும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தோனியிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர், ``எந்த உணவை ஒருபோதும் வேண்டாமென்று சொல்ல மாட்டீர்கள்?" என்று கேள்வி கேட்பார். அதற்கு, ``பட்டர் சிக்கன்" எனப் பதிலளிக்கும் தோனி, ``தொடர்ச்சியாகவெல்லாம் சாப்பிட மாட்டேன். 2004-ல் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். 2005 முதல் இந்தியா மற்றும் பல்வேறு இடங்களில் விளையாடத் தொடங்கினோம். அப்போது, ஹோட்டல்களில் ஒரு பட்டர் சிக்கன், ஒரு ரொட்டி, ஒரு மில்க் ஷேக் மதியமும், இரவும் ஆர்டர் செய்வேன்.

இரண்டாவது நாள் கால் செய்யும்போது `அதே ஆர்டரா' என்று கேட்பார்கள், நானும் சிரித்துக்கொண்டே ஆம் என்று சொல்வேன். முக்கியமாக, அதில் சிக்கன் சாப்பிட மாட்டேன். அந்தக் கிரேவியில் ரொட்டி தொட்டு சாப்பிடுவேன்" என்று கூறுவார். அப்போது, ``அதற்கு பட்டர் பன்னீரும் சாப்பிடலாம், தெரியுமா உங்களுக்கு" என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும்போது, ``இரண்டும் ஒன்று கிடையாது." என்று தோனி சொல்வார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

சீனா: "நிறுவனம் சொல்லும் நேரத்தில்தான் கழிவறையைப் பயன்படுத்தணும்" - ஊழியர்களுக்கு நூதனக் கட்டுப்பாடு

தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் வேலை பார்க்கும் நேரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்கள் கழிவறை பயன்படுத்தும் நேரத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெற்கு சீனாவில் உள்ள ஒரு நிறுவனம்.போஸான் மற்றும் க... மேலும் பார்க்க

``தேர்வு தேதி மறந்து விட்டது'' -மலையிலிருந்து 5 நிமிடத்தில் பாராசூட்டில் வந்து தேர்வு எழுதிய மாணவர்!

மகாராஷ்டிராவில் இப்போது கல்லூரி மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. தேர்வுக்கு செல்லும் போது மாணவர்கள் சிலர் தங்களது ஹால் டிக்கெட்டை மறந்துவிடுவதுண்டு. ஆனால் ஒரு மாணவர் தனது தேர்... மேலும் பார்க்க

Shikhar Dhawan: `ஆன்மிகம் வழியாகத்தான் என் மகனைப் பார்க்கிறேன்’ - அப்பாவாக வருந்தும் ஷிகர் தவான்

வருந்தும் தவான்பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவரின் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்கமுடியாது. இடதுக் கை ஆட்டக்காரரான இவர் மைதானத்தில் இருந்தபோதெல்லாம் துடிப்புடன் செயல்ப... மேலும் பார்க்க

கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!

Humpback Whale அல்லது கூனல் முதுகு திமிங்கலம் ஒன்று கயாகிங் (சிறிய வகை படகில் பயணம் செய்வது) செய்த நபரை அப்படியே விழுங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிலி நாட்டின் படகோனியா பகுதியில் எ... மேலும் பார்க்க

``வாய்ப்பு கிடைத்தால் மலையாள சினிமாவில் நடிப்பேன்" -கேரளா வந்த கும்பமேளா வைரல் பெண் மோனலிஸா!

கேரளாவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் போபி செம்மண்ணூர். நகைக்கடைகள் நடத்திவரும் இவர், தனது நிறுவனங்களின் திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடிகைகளை அழைப்பது வழக்கம். நகைக்கடை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து ப... மேலும் பார்க்க