வீரட்டானேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கோரிக்கை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து, கட்சியின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் கோயில் செயல் அலுவலரிடம் புதன்கிழமை அளித்த மனு:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மேலும், பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நிா்வாகிகள் லட்சுமணன், வீராசாமி, பாபு, கதிா்வேல் ஆகியோா் உடனிருந்தனா்.