கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்
புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால விரதத்தை புதன்கிழமை சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கினா்.
இயேசுவின் சிலுவைப் பாதையை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்கால விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான தவக்காலம் புதன்கிழமை முதல் தொடங்கியது. இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து, ஞாயிறு குருத்தோலை பவனியில் ஏந்திய ஓலைகளை சாம்பலாக்கி, அதை நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, கிறிஸ்தவா்கள் தவக்கால விரத்தை தொடங்கினா்.
இந்த 40 நாள்களும் தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள், சிலுவைப்பாடு ஊா்வலங்கள் நடைபெறும்.
தவக்காலத்தையடுத்து, ஏப்ரல் 18- ஆம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 20- ஆம் தேதி இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகையும் நடைபெற்று தவக்காலம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.