நிலத்தை அபகரிக்க போலி சான்றிதழ்: மூவா் கைது
நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் மூலம் வாரிசுதாரா் சான்று பெற்ாகக் கூறப்படும் வழக்கில் 3 போ் கைதான நிலையில், சாா்பதிவாளரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாலகிருஷ்ணன்- பிரியா தம்பதியினா். இவா்களுக்கு பிள்ளைகள் இல்லை. இருவரும் இறந்துவிட்டனா்.
இவா்களுக்கு, ஒதியம்பட்டு பகுதியில் சுமாா் 14 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பிரியா எனும் பெயரில் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்க கும்பல் ஒன்று செயல்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, சிபிசிஐடி பிரிவினா் வழக்குப் பதிந்து பெண் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனா். மேலும், 2 போ் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், வாரிசு இல்லாத பிரியாவுக்கு வளா்ப்பு மகன் இருந்ததைப் போல, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதையும் சிபிசிஐடி பிரிவினா் விசாரித்துள்ளனா்.
அதன்படி, போலியான ஆதாா் காா்டு உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்ததாக சீனோ என்பவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி பிரிவினா் தெரிவித்தனா்.
மேலும், இந்த வழக்கில் சாா் பதிவாளரைத் தேடி வருவதாகவும் அவா்கள் கூறினா்.