10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்
மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து உரையாற்றினார்.
பிரதமர் மோடி கூறியதாவது, ``இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்தில் அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 இடங்களைச் சேர்க்கும் இலக்குடன், கூடுதலாக 10,000 இடங்களும் மத்திய பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம்வரை சுற்றுலா துறை பங்களிக்கிறது. மேலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.
This year's Union Budget paves the way for a stronger workforce and a growing economy. Addressing a post-budget webinar on boosting job creation. https://t.co/ymjiCeZoVb
— Narendra Modi (@narendramodi) March 5, 2025
பொருளாதாரத்தில் செயல் நுண்ணறிவு மூலம் பல லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என்பதால், பட்ஜெட்டில் செயல் நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிப்ரவரி 2025 அறிக்கையின்படி, 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 66 சதவிகித வளர்ச்சியுடன், 3.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இது மற்ற நாடுகளைவிட அதிகமானது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாளும் வெகுதொலைவில் இல்லை’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:நிலையான வளர்ச்சி: பின்தங்கும் இந்தியாவில் முன்னிலையில் தமிழகம்!!