பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
குளச்சல் அருகே பைக் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே புல்லன்விளையை சோ்ந்த தொழிலாளி தனிஷ்லாஸ் (75). இவா் செல்ல உடையாா்விளை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தபோது குளச்சலை சோ்ந்த சிவக்குமாா் (49) என்பவா் ஓட்டி வந்த பைக் தனிஷ்லாஸ் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனா்.
அப் பகுதியினா் இருவரையும் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் தனிஷ்லாஸ் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி தனிஷ்லாஸ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.