செய்திகள் :

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது! -டிரம்ப்

post image

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் பேசும்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.

அதிபர் டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம்.

நான் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலையை பிரகடப்படுத்தினேன். நமது நாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்க அமெரிக்க ராணுவத்தையும் எல்லைப் படையையும் நான் நிறுத்தினேன்.

இதன் விளைவாக, கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடனுடன் ஆட்சிக்காலத்தில், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தனர்.” எனத் தெரிவித்தார்.

பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் சீனா!

சீனாவின் பெண்ணின் திருமண வயதை 20ல் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்... மேலும் பார்க்க

பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பளவில் எலானுக்கு இழப்பு!

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ட... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?

வர்த்தகப் போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியிலான `சண்டை செய்ய’ தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.சீனா, தங்கள் மீதான வரி விதிப்புக்கு பதிலட... மேலும் பார்க்க

டிரம்ப் அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி! சோகப் பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையின் போது அறிமுகப்படுத்திய 13 வயது உளவுத்துறை அதிகாரி யார்? அவரின் பின்னணி என்ன? என்பது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் ட... மேலும் பார்க்க

அமெரிக்க உளவுத் தகவல்களை உக்ரைனுக்கு பகிர பிரிட்டனுக்கு தடை!

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைமாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா... மேலும் பார்க்க

டிரம்ப் உரைக்கு எதிர்ப்பு: ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றம்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப்,... மேலும் பார்க்க