பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பளவில் எலானுக்கு இழப்பு!
டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் புதன்கிழமையில் 272 டாலர் என்ற நிலையில் முடிவடைந்தது.
டெஸ்லாவின் பங்குகள் சுமார் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக, டிசம்பர் மாதம் 464 பில்லியன் டாலராக இருந்த எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு, 116.3 பில்லியன் டாலர் குறைந்து தற்போது 347.7 பில்லியன் டாலர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது, தற்போதைய 13 ஆவது பணக்காரரான பில்கேட்ஸின் நிகர மதிப்பைவிட (108.1 பில்லியன் டாலர்) அதிகமாகும்.
இருப்பினும், அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ பங்குகள் ஓரளவில் குறிப்பிடத்தக்க லாபத்தை அளித்து வருகிறது. டெஸ்லாவின் பங்கு விலை, அமெரிக்க அதிபர் தேர்தல் நாளிலிருந்து குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?