செய்திகள் :

பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது

post image

ஆவடியில் பாதுகாப்புத்துறை அதிகாரி கொலை வழக்கில், 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனமான டேங்க் பேக்டரியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ரஞ்சித் சிங் ராணா (52). இவர் ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது 2-ஆவது மனைவி மதுமதி. ரஞ்சித் சிங் ராணா அடிக்கடி மது அருந்தி விட்டு, மதுமதியை கொடுமைப்படுத்தி வந்தாராம். இதையடுத்து, அவரை கொலை செய்ய மதுமதி, தனது சகோதரர் பாலாஜியுடன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த 1991-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ரஞ்சித் சிங் ராணாவை மதுமதி, பாலாஜி (படம்) ஆகிய இருவரும் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர்.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் கொலை வழக்கு பதிந்து மதிமதியை கைது செய்தனர். பாலாஜியை தேடி வந்தனர். ஆனால் அவர் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டார். வழக்கு தொடர்பாக பாலாஜியை பிடித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் அவரை மும்பைக்கு பலமுறை சென்று தேடியும் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், பாலாஜி விருதுநகரில் குடும்பத்துடன் வசிப்பது அண்மையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை போலீஸார் விருதுநகருக்குச் சென்று பாலாஜியை திங்கள்கிழமை பிடித்து ஆவடிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாரை ஆணையர் கி.சங்கர் பாராட்டினார்.

இதற்கிடையில் 1998-ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் ராணா கொலை வழக்கில் இருந்து மதுமதியை அம்பத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்: தூத்துக்குடி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

தூத்துக்குடி: கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் (மாா்ச் 5) தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.இயேசு சிலுவ... மேலும் பார்க்க

சாம்பல் புதன்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

புதுச்சேரி: கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் (மாா்ச் 5) தொடங்கியது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.இயேச... மேலும் பார்க்க

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நா... மேலும் பார்க்க

அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல... மேலும் பார்க்க