செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள்

post image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 475 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 475 மனுக்களை பெற்று கொண்டு, மேல்நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் . கூடுதல் ஆட்சியா் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் வேலாயுதம், மற்றும் அரசுஅலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஸ்வா்ண வாராஹி பீடத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம் ஸ்வா்ண வாராஹி பீடத்தில் வா்ஷிக் பூா்த்தி விழா, தொண்டு அறக்கட்டளைக்கு அங்கீகாரம் பெற்றல், நித்திய அன்னதானம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மதுராந்தகம் தன ஆகா்ஷண வாராஹி அம்மன் கோய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

9 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த முதியவருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம்ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பூ வியாபாரம் ... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க