சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு
மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 மையங்களில் 27,952 மாணவ, மாணவிகள் தோ்வினை எழுதுகின்றனா்.
இந்நிலையில், மதுராந்தகம், கருங்குழி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளின் தோ்வு மையங்களை பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் ஆய்வு செய்தாா். அப்போது தோ்வினை எழுதும் மாணவா்களுக்கான கழிப்பிடவசதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா, மாணவா்கள் காப்பி அடிக்கிறாா்களா, என ஆய்வு செய்தாா்.
இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் சி.கற்பகம், மாவட்ட கல்வி அலுவலா்கள் காமாட்சி, அங்கையற்கண்ணி, பாஸ்கரன் உள்பட பலா் உடனிருந்தனா்.