குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
ஆலன்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஆலன்கோட்டை சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அணுசக்தித் துறையின்கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்பின்கீழ், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமுக்கு, முதன்மைப் பொதுமேலாளா்- ஆலைத் தலைவா் என். செல்வராஜன் தலைமை வகித்தாா். தேவாலய போதகா் ஐசக் வினோ, செயலா் ஒய். வேதமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் பங்கேற்ற 506 பேருக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண் தொடா்பான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனைகள் செய்து, சிகிச்சையளித்தனா். 249 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
ஆலன்கோட்டை சிஎஸ்ஐ சபை கணக்கா் ரெஜிபால், சாம் எபனேசா், ஐஆா்இஎல் நிறுவனப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.