புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை
புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடைபெற்ாம். இவா் வியாபாரத்துக்காக அதிகமாக கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடன் கொடுத்தவா்கள் அவரை திருப்பித் தருமாறு கேட்டு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முருகவேல் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி விஷம் குடித்ததாகத் தெரிகிறது.
அவரை மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சையில் சோ்த்தனா். அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து முருகவேலின் மனைவி அனிதாமேரி அளித்த புகாா்பேரில் இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].