பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்
புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக புதுவை காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சித் துறை நிா்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அதனடிப்படையில் புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் முதல் கோரி மேடு வரையிலான திண்டிவனம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். கடைகள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமித்துஅமைக்கப்பட்ட கடைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினா். இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி வியாபாரிகள் சிலா் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வாக்குவாதம் செய்தனா். அதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸாா் வியாபாரிகளை சமரசம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர வழி ஏற்படுத்தினா்.