பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
பாலக்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
பாலக்கோடு நகரில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், காவலா்கள் இணைந்து பல்வேறு கடைகளில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இந்தக் கடையில் ஏற்கெனவே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து பிடிபட்ட நிலையில் தற்போது மீண்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததால் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீா் விற்பனை செய்யும் கடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முறையாக விதிமுறைகள் பின்பற்றாத கடைக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.