செய்திகள் :

பாகிஸ்தான் சிந்து நதியில் ரூ. 80,000 கோடி தங்கம்! இந்தியாவுக்கு பங்குள்ளதா?

post image

பாகிஸ்தானுக்குட்பட்ட சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் படிந்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இமய மலையில் இருந்து உருவாகும் சிந்து நதி பாகிஸ்தான் வழியாகவும் பாய்வதால், தங்கத் துகள்கள் அந்நாட்டிற்கு அடித்துச்செல்லப்பட்டிருக்கும் என்றும், இதில் இந்தியாவுக்கும் பங்குள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் துறை மற்றும் பஞ்சாப் சுரங்கம் - தனிமங்கள் துறை தலைமையில் சிந்து நதியையொட்டி அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் சிந்து நதியில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது குறுத்துப் பேசிய பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் துறை இயக்குநர் ஸர்காம் இசாக் கான், சிந்து நதிப் படுகைகளில் உள்ள மண்ணில் ஏராளமான தாதுக்களுடன் தங்கத் துகள்களும் உள்ளன. இப்பகுதியில் வணிக தங்கச் சுரங்கப் பணிகளுக்கான தேவையை இது உறுதிப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தங்கத்தில் இந்தியாவுக்கு பங்கு உண்டா?

பாகிஸ்தானின் தங்கம் கண்டறியப்பட்டுள்ள சிந்து நதியானது, இந்தியாவின் இமய மலைகளில் இருந்து உருவாகிறது. சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் செல்வ வளம் மிக்கது என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தங்கம் உள்பட ஏராளமான உலோகங்களை சிந்து சமவெளி மக்கள் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். சிந்து நதிக்கரையையொட்டி அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

இமயமலைகளின் பாறைகள் வழியாக மில்லியன் ஆண்டுகளாக வழிந்தோடும் சிந்து நதியில், அரிப்பு ஏற்பட்டு தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் இந்தியாவில் இருந்தும் தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.

பாகிஸ்தன் பொருளாதாரம் உயரும்

அட்டோக் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரத்துக்கு சிந்து நதி பாய்கிறது. இதில் மட்டும் 32.6 மெட்ரிக் டன் அளவு தங்கம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோடை காலம் வரவுள்ளதால் தண்ணீரின் அளவு குறையும் என்றும், அப்போது தங்கத் துகள்களை பிரித்தெடுப்பது எளிதான பணியாகவும் இருக்கும் என அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் உள்ளூர் மக்கள் கோடை காலத்தைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முறைகேடான அகழாய்வுகள் நடைபெறுவதைத் தவிர்க்க சில பகுதிகளில் 144 உத்தரவையும் பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தவிர்த்து கடந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வெள்ளை மாளிகை தொடர்ந்து தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்தி வருவது இணையத்தில் பேசுபொருள... மேலும் பார்க்க

இது போர் நடவடிக்கை: டிரம்ப் வரி விதிப்பு குறித்து வாரன் பஃபெட் கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஒரு வகையில் போர் நடவடிக்கைதான் என அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலகின் மிகவும் சுவாரசியமான பாடமாக... மேலும் பார்க்க

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 இந்தியர்கள் கைது!

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு நேபாளத்தின் ஜித... மேலும் பார்க்க

ராணுவ பட்ஜெட்டை உயர்த்தும் சீனா!

பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்... மேலும் பார்க்க

ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

அமெரிக்கா தனது ராணுவத்தை ஐரோப்பியத் தளங்களிலிருந்து திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 20,000-க்கும் மேற்பட்ட அமெர... மேலும் பார்க்க

மனைவியை சமாளிப்பது எப்படி? கபிங்காவிடம் கேளுங்கள்!

ஒரே ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் நண்பர்களிடமும் கூகுளிலும் உபாயங்கள் தேடிக்கொண்டிருப்பவர்கள், தான்சானியாவைச் சேர்ந்த கபிங்காவைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.கபிங்கா சப்தமே இ... மேலும் பார்க்க