தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம...
`மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்த ஒரே தலைவர் கலைஞர்தான்' - உதயநிதி ஸ்டாலின்
வக்ஃபு வாரியம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
அதில், "உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துகள். நான் ரமலான் வாழ்த்து சொல்வது பலருக்குக் கோபம் வரும். இன்னும் நூறு முறைகூட மீண்டும் மீண்டும் ரமலான் வாழ்த்தைச் சொல்வோம். இன்றைக்கு சிறுபான்மையினர் சொந்த வீடுபோல் இருக்கிற மாநிலம் 'தமிழ்நாடு'தான் என்று தைரியமாகச் சொல்லலாம். 'திராவிட முன்னேற்றக் கழகம்' இஸ்லாமியர்களின் அன்பைப் பெற்று செயலாற்றி வருகிறது.

காயிதே மில்லத் - கலைஞர் இருவருக்கும் இருந்த நட்பைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒன்றிய 'பா.ஜ.க' தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவந்து தொடர்ந்து சிறுபான்மையினருக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த வண்ணமிருக்கிறது.
இந்தியாவிலேயே அதை உறுதியுடன் எதிர்த்து நிற்பது 'தி.மு.க'தான், தமிழ்நாடு மாநிலம்தான். இன்றைக்குப் புதிதாக 'வக்ஃபு வாரிய திருத்த மசோதா' வை நடமுறைப்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது.

சாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வழக்கம். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்த இந்தியாவின் ஒரே தலைவர் கலைஞர்தான். இஸ்லாமியர்களின் நலனுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அதே உணர்வோடுதான் நாங்களும், நம் முதல்வரும் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், நீங்களும் எங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.