புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் தீ
புன்செய் புளியம்பட்டியில் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
புன்செய் புளியம்பட்டி- மாதம்பாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், நூற்பாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை கரும்புகை வெளியேறியது. இதில் அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் தீ பற்றி எரியத் தொடங்கின.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்கு பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் நூற்பாலையில் இருந்து பஞ்சு மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தனற். இது குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.