கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம் சான்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்தக்காரா்கள், கட்டுநா்கள், பொறியாளா்களின் தொழிலைப் பாதிக்கும் டிரான்சிட் பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
அகில இந்திய கட்டுநா் வல்லுநா் சங்க தேசியத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய கட்டுநா் சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை ஊரகவளா்ச்சித்துறை ஒப்பந்தக்காரா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கட்டுமானத் தொழிலாளா்கள் மத்திய சங்கம், லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.