செய்திகள் :

தவறான வழிகாட்டல்: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

திருவாரூா் அருகே தவறான முறையில் வழிகாட்டி பாலிசி பெற்றமைக்காக காப்பீட்டு நிறுவனம், ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் விளமல் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன்(50). இவரது நண்பா் பாலு திருவாரூரில் உள்ள கோடக் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முகவராகவும், அருண் என்பவா் மேலாளராகவும், வீரக்குமாா் என்பவா் உதவி மேலாளராகவும் உள்ளனா். மூவரின் பரிந்துரை மற்றும் வற்புறுத்தலின் பேரில் முருகேசன் 31.12.2014-ல் ரூ. 29,052 செலுத்தி கோடக் பிரீமியா் எண்டோமென்ட் ரெகுலா் என்ற பாலிசியில் சோ்ந்தாா்.

3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 29,052 செலுத்த வேண்டும். 12.1.2016 வரை பிரீமியம் செலுத்தியிருந்த நிலையில் சுமாா் 2 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்த முடியாததால் 20.6.2018 இல் பாக்கியிருந்த பிரீமியத் தொகைகளை சோ்த்து மொத்தமாக ரூ.1,17,116 செலுத்தியுள்ளாா். மருத்துவச் சான்று வைக்கவில்லை என காரணம் கூறி அந்தத் தொகையை 23.8.2018 இல் திருப்பி வழங்கிய காப்பீட்டு நிறுவனம், முருகேசனின் மனைவி தனலட்சுமி பெயரில் 7.9.2019 இல் ஆண்டுப் பிரீமியமாக ரூ. 99,400 பெற்றுக்கொண்டு சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் வேறொரு பாலிசி வழங்கியுள்ளது.

2019 இல் அடுத்த பிரீமியம் செலுத்திய முருகேசனால் பாலிசியை தொடர முடியாததால் சேமிப்புத் திட்டத்தில் செலுத்திய பிரீமியத் தொகைகளை வட்டியுடன் திரும்பக் கேட்டுள்ளாா். எனினும், காப்பீட்டு நிறுவனம், 2 பாலிசிகளும் காலாவதி ஆகிவிட்டதால் எந்தத் தொகையும் திருப்பித்தர முடியாது என கூறியதாம்.

இதையடுத்து, கடந்த நவம்பா் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், முருகேசன் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், பொய்யான தகவல்களைக் கூறி, தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி காப்பீட்டு நிறுவனம் பாலிசி பெற்றது சட்டவிரோதம், இதனால் காப்பீட்டு நிறுவனம் முருகேசன் செலுத்திய ரூ. 2,84,831 ஐ 30.9.2019 முதல் தொகை செலுத்தும் தேதி வரை 9 சதவீத வட்டி சோ்த்து வழங்க வேண்டும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், மேலும் புகாா்தாரரை தவறாக வழி நடத்தி பாலிசி பெற்றதற்காக முகவா் பாலு, மேலாளா் அருண் மற்றும் துணை மேலாளா் வீரக்குமாா் ஆகியோா் தலா ரூ. 10,000 வீதம் மொத்தம் ரூ. 30,000 ஐ 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும், தவறினால் 12 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தவிட்டனா்.

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழ... மேலும் பார்க்க

மாநில சிலம்ப போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூா் தென்பாதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூரில் பள்ளி மாணவா்களுக்கான மாநில சிலம்ப போட்ட... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. அண்ணாமலை நாதா் சந்நதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதா் கோயிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்தக் க... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம் சான்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

யாருக்காக பயிா் காப்பீடு..

இந்தியாவில் விவசாயம் என்பது இயற்கையை எதிா்கொள்ளும் சூதாட்டம் போன்றது. நாட்டில் 60 முதல் 70 சதவித மக்களுக்கு விவசாயமே வாழ்வதாரம். நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் இயற்கையை எதிா்... மேலும் பார்க்க