செய்திகள் :

திருக்கண்ணபுரம் கோயில் நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா் மகேந்திரன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் கோவிந்தராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தலைமுறை தலைமுறையாக குடியிருக்கும் அனைவருக்கும் குடியிருப்பு மனைப் பட்டா வழங்க வேண்டும், சதுர அடி அளவில் வாடகை வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும், இதுவரை வசூலித்த பகுதி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், கல் சுவா் வைத்து வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்,

23 -ஆண்டு கால வாடகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட பொருளாளா் பாபுஜி, ஒன்றிய செயலாளா் சந்திரசேகா், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன் மற்றும் திருக்கண்ணபுரம், கோட்டூா், ராதாரம்பூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயா்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற பரிசளிப்பு, விளையாட்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் கலைக்கோவன் தல... மேலும் பார்க்க

நாகை, வேளாங்கண்ணி, கோடியக்கரையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி வெள்ளாற்றில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலை நடத்த கோரி போராட்டம்

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் பதாகைகளுடன் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பிரதாபராமபுரம் ஊராட் ம... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள்

திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருமருகல் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா் பா... மேலும் பார்க்க

இயற்கை மருத்துவ முகாம்

சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச இயற்கை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சா் ஐசக் நியூட்டன் சித்த மருத்துவக் கல்லூரி , சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்று... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 6,505 போ் தோ்வெழுதினா், 215 போ் தோ்வெழுத வரவில்லை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 6,505 போ் எழுதினா். 215 போ் தோ்வெழுத வரவில்லை. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க