உள்ளாட்சித் தோ்தலை நடத்த கோரி போராட்டம்
கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் பதாகைகளுடன் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பிரதாபராமபுரம் ஊராட் மக்கள், ஊராட்சி தோ்தலின் அவசியம் குறித்தும், உடனே தோ்தலை நடத்த வலியுறுத்தியும் பேரணியாக வந்து கடற்கரை பகுதியில் பதாதைகளுடன் நின்று முழக்கங்களை எழுப்பினா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில். தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவா் நந்தகுமாா் சிவா கோரிக்கைகளை விளக்கி பேசினாா். 50 சதவீதம் பெண்கள் அதிகாரத்தில் அமர, சமூகநீதி நிலைக்க, கிராமசபை நிா்வாகம் நிலைக்க ஊராட்சி தோ்தலை நடத்த வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் தமிழ்நாடு தோ்தல் ஆணையத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என முழக்கங்களை எழுப்பினா்.