பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு
வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் இருந்து வேளாண்மைக்கென பிரத்யேக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 5-ஆவது முறையாக மார்ச் 15-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
இதற்கென உழவர் செயலி, tnagribudget2025@gmail.com என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் வழியே கருத்துகளைப் பகிரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.