செய்திகள் :

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

post image

நில அபகரிப்பு வழக்கில் மு.க.அழகிரியை விடுவித்த மதுரை விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்காக அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரி, சம்பத்குமார் உள்பட 7 பேர் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் 2014-இல் வழக்குப் பதிவு செய்தனர்.இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை விசாரணை நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து, கடந்த 2021-இல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதேபோல வழக்கில் இருந்து முழுமையாக தன்னை விடுவிக்கக் கோரி அழகிரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அழகிரியை விடுவித்த மதுரை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேபோல, வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக தன்னை விடுவிக்கக் கோரி அழகிரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட்டார்.

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா: முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில், 28-ஆவது ஆண்டு திருக்குறள் திருவிழா (திருக்குறள் ஒப்பித்தல் போட்டி) திருச்சியில் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதுதொடர்பாக, அறக்கட்டளையின் தலைவர் பூவை பி. தய... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பிரதமா் உரை: மருத்துவ மாணவா்கள் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி தொடா்பாக பிரதமா் மோடி ஆற்றவுள்ள உரை மற்றும் கருத்தரங்க நிகழ்வுகளில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இது தொ... மேலும் பார்க்க

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு

எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் பு... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்து... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

முதல்வா் மருந்தகங்களில் இதுவரை ரூ. 27 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், 50,000 போ் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் ... மேலும் பார்க்க