செய்திகள் :

பழனி: சுகாதார சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; சாக்கடைகளை மூடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள காந்தி ரோடு சாலையானது பல்வேறு வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பிரதான சாலையாகும். இதே சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து சங்கிலி தேவர் சந்துக்கு செல்லும் வழியில் சாக்கடையை பராமரிப்பதற்காக தோண்டப்பட்ட குழி, மீண்டும் சரி செய்யப்படாமல் அப்படியே இருந்தது.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, ``சாக்கடையை பராமரிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே இதனை தோண்டினார்கள்.

ஆனால் அதன் பிறகு இப்படியே தான் இருக்கின்றது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இடையூறுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த குழி இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். இது போன்ற அச்சுறுத்தல்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல் நான்கு சக்கர வாகனங்கள் இந்த தெருவின் வழியாகச் செல்ல முடிவதில்லை. இதனால் வேறு வழியாக சற்றி வர நேரிடுகிறது" என்று கூறினர்.

அருகாமையில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள், ``இதனால் எங்கள் வியாபாரமே கேள்விக்குள்ளாகும் அளவிற்கு ஆகிறது. ஏனென்றால் சாக்கடையின் துர்நாற்றம் மிக அதிகமாக வீசுவதால் வாடிக்கையாளர்கள் இங்கு அமர்ந்து தேநீர் அருந்தகூட முகம் சுளிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படி திறந்து கிடக்கும் சாக்கடையால் அதிக அளவு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இந்த இடத்தில் மட்டுமல்ல, காந்தி ரோடு சாலையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்புக்காக தோண்டப்பட்ட சாக்கடைகள் திறந்த நிலையிலேயே கிடக்கின்றன. அதிகாரிகள் உடனைடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று வேதனை தெரிவித்தனர்.

எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுப்பதற்காகவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர்.

இது குறித்து விகடனில் டிசம்பர் 15-ம் தேதி பழனி: `திறந்து கிடக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு, அச்சுறுத்தல்' - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டு இருந்தோம்.

விகடன் சுட்டிக்காட்டியதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்போது இதனை சீரமைத்துக் கொடுத்துள்ளனர். இந்தச் சீரமைப்பு பணியின் காரணமாக அந்தப் பகுதியில் நிலவிவந்த சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் - சிரமத்தில் மக்கள்!

நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! - சீரமைக்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரியாலம் என்ற கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. இவ்விடத்தில் நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் மற்றும் பிற ஊர்களுக்குச்... மேலும் பார்க்க

SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' - யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு ம... மேலும் பார்க்க

`Gold card' US visa: அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? -ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி! |Explained

`Gold card' US visa - இதோ வந்துவிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு.ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ட்ரம்... மேலும் பார்க்க

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத... மேலும் பார்க்க