செய்திகள் :

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்!

post image

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவி நீலம் ஷிண்டே. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இவருக்கு அமெரிக்காவில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் இவருக்கு மார்பு மற்றும் தலையில் காயம் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இவர் கோமாவிற்குச் சென்றுள்ளார்.

இந்த விபத்து குறித்து நீலமின் குடும்பத்தினருக்கு இரண்டு நாள்கள் கழித்து அதாவது பிப்ரவரி 16-ம் தேதி தான் தெரியவந்துள்ளது. அப்போதிருந்து நீலமின் குடும்பத்தினர் அமெரிக்கா விசாவிற்கு முயன்று வருகின்றனர். ஆனால், இன்னும் அவர்களுக்கு விசா கிட்டவில்லை.

நீலம் ஷிண்டே

இது குறித்து மகாராஷ்டிரா எம்.பி சுப்ரியா சுலே தனது எக்ஸ் பக்கத்தில் மாணவியின் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரியுள்ளார்.

சம்பவம் குறித்து நீலமின் தந்தை கூறும்போது, ``நீலமிடம் கடைசியாக நாங்கள் பிப்ரவரி 12-ம் தேதி பேசினோம். இப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவரைக் காண செல்ல அமெரிக்கா விசா தேவைப்படுகிறது" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

மாணவியின் பெற்றோருக்கு விசா கிடைக்க உதவ மத்திய அரசுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

SEBI Chief : 'அறிவிக்கப்பட்ட அடுத்த செபி தலைவர்!' - யார் இந்த துஹின் காந்தா பாண்டே?!

இன்றோடு தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச்சின் பணிக்காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த செபி தலைவராக தற்போது நிதி செயலாளராக இருக்கும் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவரின் பணிக... மேலும் பார்க்க

`Gold card' US visa: அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? -ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி! |Explained

`Gold card' US visa - இதோ வந்துவிட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு.ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ட்ரம்... மேலும் பார்க்க

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத... மேலும் பார்க்க

Odisha: ``தரமற்ற உணவு, அவமரியாதை..'' - ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற 116 மாணவர்கள்!

அரசு பள்ளியின் 116 மாணவர்கள் ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கிறது பாசிபிதா அரசு உயர்நிலைப் பள்ளி.... மேலும் பார்க்க

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றமா? - ரேகா குப்தா விளக்கம்!

டெல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்து பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றியதாக பாஜக மீது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இக்குற்றச்சாட்டை மறுத்து, விளக்... மேலும் பார்க்க

America: `இப்படி நடக்கும்னு நினைக்கல' - ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண், பெண் பாலினங்களைத் தவிர, பிற பாலினங்களை ஏற்க மறுப்பவர், அங்கீகரிக்காதவர் என்பது அனைவரும் அறிந்ததே.அதிபராகப் பதவியேற்றதும் அவர் அடுக்கடுக்காக கையெழுத்திட்ட உத்தரவுகளில், 'இன... மேலும் பார்க்க