செய்திகள் :

பாகிஸ்தான் அணி வீழ்ச்சியை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் வேண்டுகோள்!

post image

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படுமென பாகிஸ்தானின் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

கடைசி போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்களிடம் இருந்து பிசிபி குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானின் மூத்த அரசு அதிகாரி ராணா சனாவுல்லா கூறியதாவது:

மோசமான கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட நிறுவனம். அவர்கள் நினைத்ததை செய்யக்கூடியவர்கள். பாகிஸ்தான் அணி குறித்து அமைச்சரவை, மக்களவையில் பேச பிரதமரிடம் வேண்டுகோள் வைப்பேன்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சமீப பத்தாண்டுகளாக பல உயர்வு, தாழ்வு ஏற்பட்டு கிரிக்கெட் வாரியத்தை பலமுறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் செலவு குறித்து மக்கள் பார்வைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்.

ஆலோசகர்கள் ரூ. 50 லட்சம் வாங்கிக்கொண்டு அவர்களது கடைமையை தெரியாததுபோல இருக்கிறார்கள். வேலை செய்யாமலே பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள்.

இது பாகிஸ்தானா ஐரோப்பிய நாடா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சலுகைகள், சிறப்புகளைப் பார்த்தால் இது பாகிஸ்தானா அல்லது வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடா என நீங்களே அதிசயிப்பீர்கள்.

இந்த விஷயங்களை பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம். பிசிபியில் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதால்தான் பாகிஸ்தான் அணியின் நிலைமை இப்படி இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள நிலையான ஒரு நல்ல கிரிக்கெட் வாரியம் வேண்டும். அங்கு இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க

இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷுப்மன் கில் மிகவ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!

ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றின் 10-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப்.28) விளையாடுகின்றன.... மேலும் பார்க்க

ஆப்கன் - ஆஸி. போட்டிக்கு பாதிப்பா? 3-வது வெற்றி முனைப்பில் மழை!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றின் 10-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப்.28) விளையாடுகின்றன.குரூப்-ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவி... மேலும் பார்க்க

ரஞ்சி இறுதிப் போட்டி: சச்சின் பேபி அரைசதம், 136 ரன்கள் பின்னிலையில் கேரளம்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி 243/5 ரன்கள் எடுத்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா முதல் இன்னிங்ஸில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொட... மேலும் பார்க்க

துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை!

துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவுக்கு எவ்வளவு சாம்பியன்ஸ் டிராபியில் எவ்வளவு சாதகம் எனத் தெரிய ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை என தென்னாப்பிரிக்க வீரர் வான் டர் டுசென் கூறியுள்ளார... மேலும் பார்க்க