செய்திகள் :

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

post image

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ் கானுக்குச் சொந்தமான மீன்பிடி படகு வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்தது.

பேரிடர் குறித்த தகவல் கிடைத்ததும், இந்தியக் கடலோர காவல்படை, இந்தியக் கடற்படை விரைவான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

மும்பையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள், மீன்பிடி படகான 190 ப்ராங்ஸ் லெப்டினன்ட் 21இல் தீப்பிடிப்பதைக் கண்டனர்.

இந்த நிலையில், படகிலிருந்த அனைத்து மீனவர்களும் அப்பகுதியில் உள்ள மற்றொரு படகில் இறக்கிவிடப்பட்டது. படகிலிருந்து 18 பணியாளர்களையும் அவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர் இதை ராய்காட் எஸ்பி உறுதிப்படுத்தினார்.

உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ்... மேலும் பார்க்க

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

பாஜகவின் தேசியத் தலைவரை நியமிக்கும் பணியில் மேலும் தொய்வு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகிக்கிறார். இவர் 2019 ஆம் ஆண்டில் பாஜகவின்... மேலும் பார்க்க

கோவா வரும் சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு இட்லி, சாம்பார் தான் காரணம்!

நமது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு இட்லி, சாம்பார், வடா பாவ் மற்றும் உக்ரைன் போர்தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். மேலும் பார்க்க

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மைதேயி மத வழிபாட்டு தலம் அருகிலுள்ள மலைகளில் இருந்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மைதேயின் புனிதத் தலமான கோங்பா மருவுக்கு பக... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்... மேலும் பார்க்க