செய்திகள் :

துபையில் மட்டுமே விளையாடும் இந்திய அணி; நியூசிலாந்து வீரர் கூறுவதென்ன?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடவுள்ள போட்டி குறித்து நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், குரூப் பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டி அணிகளுக்குள் கடுமையாக உள்ளது.

இந்திய அணிக்கு சாதகமான சூழலா?

குரூப் சுற்றின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள உள்ள நிலையில், வித்தியாசமான சூழலில் விளையாடவுள்ளதை நினைத்து உற்சாகமாக இருப்பதாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி துபையில் அனைத்துப் போட்டிகளையும் விளையாடப் போகிறது என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதனால், அது குறித்து தொடர்ந்து பேசுவதால் எந்த ஒரு பயனும் இல்லை. இந்திய அணிக்கு எதிராக துபையில் விளையாடவுள்ளது உற்சாகமாக இருக்கிறது. வித்தியாசமான சூழல், புதிய ஆடுகளத்தில் விளையாடவுள்ளோம். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உள்ளோம்.

துபையில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு உதவுவதாக உள்ளது. அதனால், இந்த ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு எங்களை சீக்கிரமாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்கள் விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. எந்த ஆடுகளங்களிலும் விளையாடும் அளவிலான சமபலத்துடன் கூடிய அணியாக நாங்கள் உள்ளோம். அதனால் எந்த ஆடுகளங்களிலும் எங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்

எங்களை அதிகப்படியான அழுத்தத்துக்கு ஆளாக்கிக்கொள்ள விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட போதிலும், இந்தியாவுக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி என்றார்.

மழையால் கைவிடப்பட்ட போட்டி; ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும்... மேலும் பார்க்க

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்... மேலும் பார்க்க

இருவர் அசத்தல் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விள... மேலும் பார்க்க

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க