பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்
மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமலான் நோன்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை என்று காவல் அதிகாரிகள் கூறினர்.