நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!
நேபாளத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் டெட்டானிக் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்!