அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழகத்தில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பட்டியல் வெளியானது.
இதையும் படிக்க : விருப்பமில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள்- சீமான்
இந்த நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்றும், மார்ச் 5-ல் நடைபெறும் கூட்டத்தில் எங்கள் கட்சியின் சார்பில் 2 பேர் பங்கேற்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.