மும்பை, பைகுலா பகுதியில் மிக உயர்ந்த கட்டடத்தின் 42வது தளத்தில் தீ!
மும்பையின் பைகுலா கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான கட்டடத்தின் 42வது தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வருகிறார்கள்.
57 தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தில், வெள்ளிக்கிழமை காலை 42வது தளத்தில் தீ விபத்து நேரிட்டது. தீயணைப்புத் துறையினருக்கு 10.45 மணிக்கு இது தொடர்பாக அழைப்பு வந்துள்ளது.
உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதுவரை அதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தீ விபத்து நேரிட்டதும், கட்டடத்தின் பற்ற பகுதிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ மற்ற தளங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.