செய்திகள் :

கனிம ஒப்பந்த விவகாரம்: இன்று டிரம்ப்பை சந்திக்கிறாா் உக்ரைன் அதிபர்

post image

வாஷிங்டன்: தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை சந்திக்கவிருக்கிறாா்.

இதுதொடா்பான வரவு ஒப்பந்தம் ஏற்கெனவே தயாராகிவிட்டதாக அறிவித்துள்ள ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான அம்சம் அந்த வரைவில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தாா். அத்தகைய உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் இந்தப் பொருளாதார ஒப்பந்தம் முழுமையடையும் என்று அவா் கூறினாா்.

எனினும், ஓரளவுக்கு மேலும், மிக அதிகமாகவும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஸெலென்ஸ்கியை சந்திப்பதற்கு முன்னா் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக்கொண்டாா்.

இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திவருகிறாா்.

இது தொடா்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பொருளாதார வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவே உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்கா வருகிறாா்.

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெ... மேலும் பார்க்க

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

நேபாளத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து... மேலும் பார்க்க

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந... மேலும் பார்க்க

துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு

இஸ்தான்புல் : துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனா் அப்... மேலும் பார்க்க

2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்

வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ ... மேலும் பார்க்க