செய்திகள் :

காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!

post image

நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து விசாரிப்பதற்காக வியாழக்கிழமை ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி, சீமான் ஆஜராக நான்கு வாரம் அவகாசம் கோரினர்.

இதையடுத்து, சீமான் வெள்ளிக்கிழமை (பிப். 28) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் வாயில் கதவில் வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணையை வியாழக்கிழமை ஒட்டினா். இது ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் காா் ஓட்டுநா் சுபாகா், அந்த அழைப்பாணையை கிழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், சீமானின் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றார். அப்போது, சீமான் வீட்டு காவலரும் முன்னாள் ராணுவ வீரருமான அமல்ராஜ் போலீசாரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, அமல்ராஜை கைது செய்து அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை நீலாங்கரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீஸ் ஒட்டிய சம்மனை கிழித்த ஓட்டுநர் சுபாகரும் கைது செய்யப்பட்டார். இருவரையும், சோழிங்கநல்லூா் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி

வழக்கின் பின்னணி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 24-ஆம் தேதி வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், காவலா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் விசாரணை செய்ய நீலாங்கரை சந்தீப் சாலை பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்றனா்.

தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.மொழிப் போரில் தமிழ்நாடு போராட... மேலும் பார்க்க

முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.இது தொடர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதில்,”நாளை பிறந்த நாள் காணு... மேலும் பார்க்க

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? முதல்வர் கேள்வி!

இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேசவிரோதிகள் யார்? என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து கட்சியினருக்கு இன்று(பிப். 28) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித... மேலும் பார்க்க

மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கைதான்: அமைச்சர் சேகர்பாபு

நாங்கள் மாய்ந்தாலும் மடிந்தாலும் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை பிராட்வே பகுதியில் போதை இல்லா தமிழகம் திட்டத்தின் கீழ் மாணவ... மேலும் பார்க்க

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்!

மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்! நாளை பொறுப்பேற்பு!

சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைவராக பாலசந்திரன் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், அமுதா முதல் பெண் தலைவராக... மேலும் பார்க்க