செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!

post image

ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றின் 10-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப்.28) விளையாடுகின்றன.

குரூப்-ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப் - பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், லாகூரில் நடைபெறும் போட்டி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கும் வெற்றியுடன் அரையிறுதிக்குச் செல்லும் முனைப்பில் இருக்கையில் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது.

காலிறுதிபோல இந்தப் போட்டியில் வெல்பவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

ஆஸ்திரேலியா: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி, அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி

இருவர் அசத்தல் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்; பஞ்சாப் கிங்ஸுக்கு நன்றி தெரிவித்த ஷஷாங் சிங்!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் ஒருவராக பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங் இடம்பிடித்துள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷஷாங் சிங் மிகவும் சிறப்பாக விள... மேலும் பார்க்க

இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!

ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன்... மேலும் பார்க்க

இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷுப்மன் கில் மிகவ... மேலும் பார்க்க

ஆப்கன் - ஆஸி. போட்டிக்கு பாதிப்பா? 3-வது வெற்றி முனைப்பில் மழை!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றின் 10-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப்.28) விளையாடுகின்றன.குரூப்-ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவி... மேலும் பார்க்க

ரஞ்சி இறுதிப் போட்டி: சச்சின் பேபி அரைசதம், 136 ரன்கள் பின்னிலையில் கேரளம்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி 243/5 ரன்கள் எடுத்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா முதல் இன்னிங்ஸில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொட... மேலும் பார்க்க