முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி...
ஆப்கன் - ஆஸி. போட்டிக்கு பாதிப்பா? 3-வது வெற்றி முனைப்பில் மழை!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றின் 10-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப்.28) விளையாடுகின்றன.
குரூப்-ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப் - பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், லாகூரில் நடைபெறும் போட்டி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய ஆப்கானிஸ்தானுக்கு இரண்டாவது போட்டியின் வெற்றி மிகப்பெரிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. அதேவேளை முதல் போட்டியில் வரலாற்று வெற்றிபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது போட்டி மழையால் முடிவில்லாமல் போனது.
இரு அணிகளுக்கும் வெற்றியுடன் அரையிறுதிக்குச் செல்லும் முனைப்பில் இருக்கையில் இந்தப் போட்டி முழுமையாக மழையால் பாதிக்கப்பட இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், லாகூரில் 71 சதவிகிதம் மழை பெய்யும் என்றும் போட்டி 50 - 50 சதவிகிதம் பாதிப்படையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி வீழ்ச்சியை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் வேண்டுகோள்!
போட்டி கைவிடப்பட்டால் யாருக்கு சாதகம்?
முழுமையாக மழை வந்து போட்டி பாதிக்கப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் பிரித்தளிக்கப்படும். அப்படியானால், ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும். ஆனாலும், ஆப்கானிஸ்தான் (-0.990 ரன்ரேட்) 3 புள்ளிகளுடன் போட்டியில் இருக்கும்.
சனிக்கிழமை நடைபெறும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்க (+2.140 புள்ளிகள்) அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு கிட்டும்.
இல்லையெனில் இங்கிலாந்துடன் ஆப்கானிஸ்தான் வெளியேறும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
இதையும் படிக்க: துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை!