பங்குச் சந்தை: துடைத்தெறியப்பட்ட முதலீட்டாளர்களின் ரூ.7.46 லட்சம் கோடி!
ரஞ்சி இறுதிப் போட்டி: சச்சின் பேபி அரைசதம், 136 ரன்கள் பின்னிலையில் கேரளம்!
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி 243/5 ரன்கள் எடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதா்பா முதல் இன்னிங்ஸில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் கேரள அணி 80 ஓவர்கள் முடிவில் 243/5 ரன்கள் எடுத்துள்ளது.
கேரள அணி சார்பில் ஆதித்யா சர்வாதே 185 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் சச்சின் பேபி 57 ரன்களுடனும் முகமது அசாரூதின் 17 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.
விதர்பா அணியின் துபே, நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
ஒருவேளை ஆட்டம் டிரா ஆனால் முதல் இன்னிங்ஸ் ரன்களை அடிப்படையாக வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்கள் என்பதால் இந்த இன்னிங்ஸ் முக்கியமானதாகும்.
முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள கேரள அணி வெற்றி பெறுமா என அந்த மாநில ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.