செய்திகள் :

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 28 - மார்ச் 6) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை உண்டு. போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் பயிர்விளைச்சலில் உயர்வைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துடன் அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உடல் உபாதைகள் மறையும். உற்சாகமாக இருப்பீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். திருத்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்

களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கலைத் துறையினர் காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். பெண்களுக்கு கணவருடன் பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிறையும். தன்னம்பிக்கை உயரும். பிரிந்து சென்ற உறவினர்கள் குடும்பத்தோடு இணைவார்கள். உத்தியோகஸ்தர்

களுக்கு கெடுபிடிகள் குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறக்கும். விவசாயிகள் சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்வார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைத் தவிர்க்காதீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவீர்கள். விற்காத நிலங்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள். வியாபாரிகள் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளை மேலிடம் பாராட்டும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்கள் அதிக உழைப்பால் புத்துணர்வை இழப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 28.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

காரியங்களைத் துணிச்சலுடன் முடிப்பீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கற்பனைச் சக்தியும், ஞாபகச் சக்தியும் கூடும். பிறரால் பாராட்டப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சவால்களை எதிர்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பலன் கிடைக்கும். விவசாயிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினருக்கு பொருளாதார நெருக்கடி தீரும். பெண்கள் உடன்பிறந்தோருடன் உறவை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 1, 2.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வீட்டிலும் வெளியிலும் புகழ் உயரும். புத்திசாலித்தனத்துடன் நடப்பீர்கள். எதிர்பார்த்த சில பயணங்களால் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடையை நவீனப்படுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவழிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்கள் குடும்ப ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 3, 4.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். வீட்டுக்குப் பராமரிப்புச் செலவு செய்வீர்கள். வருமானம் சிறக்கும். உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளுவைக் குறைப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விவசாயிகள் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் உயர்ந்தவர்களின் நட்பைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் ஆதரவினால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்கள் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். மாணவர்கள் சரிவிகித உணவை எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 5, 6.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்துடன் விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் இனிமையாகப் பேசுவீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கடினமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கவனமாகச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் கரிசனத்துடன் நடத்துவார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தியாகவே இருக்கும். விவசாயிகள் உரங்களுக்குச் செலவழிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பாசத்துடன் பழகுவீர்கள். கலைத் துறையினர் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் பயிற்சி எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் புதிய விற்பனை உத்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பிறருடன் நட்புடன் இருப்பீர்கள். கலைத் துறையினர் சீரான வருமானத்தைக் காண்பீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அரசு உதவிகள் கிடைக்கும். நன்கு உழைக்க வேண்டியிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்து உயரக் காண்பீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் நன்கு பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பணவரவில் உயர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள். சேமிப்பு விஷயங்களில் கருத்தாக இருப்பீர்கள். திடீர் பயணங்கள் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயமாக பயணிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடமிருந்து விலகி இருக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் திறமையுடன் பணியை முடிப்பீர்கள். கலைத் துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க வாய்ப்பு உருவாகும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிவலிங்கத்தை கையில் தாங்கிய சித்தர்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை } வாலாஜாபாத் வரும் வழியில் 4 கி.மீ. தொலைவில் அய்யம்பேட்டையில் மோகாம்பரி அம்மன் கோயில் எதிரில் சாலை அருகே உள்ள அஸ்தலிங்கேசுவரர் என்ற சித்தர் கோயில் அமைந்துள... மேலும் பார்க்க

வாழும் காலத்தில் சௌகரியமாக வாழ...

மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்று, நவதிருப்பதியில் இரண்டாவது தலம், சந்திரனுக்கு உரியது.. என்றெல்லாம் புகழப்படுவது வரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோயில் என்ற அருள்மிகு பரமபதநாதன் கோயிலாகும். "... மேலும் பார்க்க

கபாலி கற்பகாம்பாள் திருக்கல்யாணம்

"மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற பெருமையுடையது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலாகும். இத்தலத்தில் பார்வதிதேவி மயிலாக வடிவெடுத்து, புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி பூஜித்து கபாலீஸ்வரர் அருள் ... மேலும் பார்க்க

கவலைகள் நீக்கும் கருணாமூர்த்தி

வட மொழியில் "திந்திரிணி' என்பது புளியமரத்தைக் குறிக்கும். "திந்திரிணிவனம்' மருவியே "திண்டிவனம்' ஆனது. "திண்டி' என்றால் "அடர்ந்த' எனப் பொருள். காஞ்சிபுரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது, நான்கு திசைகளுக்க... மேலும் பார்க்க

தோஷங்கள் நீங்கி நலம்பெற...

சோழ நாட்டு நவக்கிரக தலங்களில் செவ்வாய் பரிகாரத் தலமாக புகழ் பெற்று விளங்குவது "புள்ளிருக்கு வேளூர்' எனும் வைத்தீஸ்வரன் கோயிலாகும். இது பரிகாரத் தலமாக விளங்க, அதற்கு இணையாக காவிரியின் தென்கரையின் தேவார... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 14 - 20) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)உடனிருப்போருடன் பெர... மேலும் பார்க்க