மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் சூப்பாக்கிச் சூடு; யாருக்கும் காயம் இல்லை
பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!
மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து வாட்சப் செயலியில் மிரட்டல் செய்தி வந்துள்ளது.
இந்தச் செய்தி கிடைத்தவுடன் அதிகாரிகள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மும்பை நகர போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் ஃபட்னவீஸுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுக்கப்பட்ட எண் குறித்து விசாரணை நடத்தியபோது அதை அனுப்பியவரின் பெயர் ‘மாலிக் ஷாபாஸ் ஹுமாயுன் ராஜ தேவ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நபரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | தில்லி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்தில் ரேகா குப்தா பங்கேற்பு!
இதேபோல, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடந்த வாரம் மர்ம நபர் ஒருவரிடமிருந்து இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஷிண்டேவின் காரில் வெடிகுண்டு வைக்கவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோரேகான், ஜேஜே மார்க் காவல்நிலையங்களுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் இந்த மெயில்கள் அனுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.