செய்திகள் :

திரையரங்க உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சப்தம் பட இயக்குநர்!

post image

சப்தம் பட இயக்குநர் அறிவழகன் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒலியமைப்பை நன்றாக வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் 7ஜி பிலிம்ஸ் சிவா இந்தப் படத்தை தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈரம் படத்தைப் போன்று ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இன்று திரையரங்கில் வெளியாகும் இந்தப் படம் குறித்து இயக்குநர் அறிவழகன் கூறியதாவது:

மதிப்பிற்குரிய அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வணக்கம், வெள்ளிக்கிழமை (பிப்.28) 7ஜி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதி நடித்து, எனது இயக்கத்தில் 'சப்தம்' என்னும் திரைப்படம் வெளியாக இருப்பதை அனைவரும் அறிவோம்.

சப்தம் திரைப்படத்தின் கதை சப்தத்தை மையமாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆவி திரில்லர் படம் என்பதால் இசை, ஒலியமைப்பு அனைத்தும் ஒரே சமயத்தில் பார்ப்பவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்காது அதன் துல்லியத்தை உணரும் வகையிலும், திகிலை உணர்த்தும் வகையிலும் டால்பி அட்மோஸ், 7.1 , 5. 1 முறையில் தனித்தனியே திரையரங்குகளுக்கு தகுந்தது போல் அமைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் திரைப்படம் அனுபவம் என்பது பெரிய திரையில், நவீன ஒளி, ஒலி தொழில் நுட்பத்துடன் பார்க்கும் போதுதான் ஒரு முழுமையான திரையரங்க அனுபவம் கிடைக்கின்றது.

எனவே, திரையிடுவதற்கு முன்பே ஒலி பெருக்கி, ஒலியமைப்பு கருவிகளை அளவு திருத்தி (Calibrate) செய்து இந்தப் படத்திற்கென ஒலி அளவினை 6 முதல் 6.5 என்று திரையரங்கு அளவு, அமைப்புக்கு ஏற்றவாறு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

சப்தம் திரைப்படத்தின் அனுபவத்தினை மக்கள் முழுமையாய் உணரும் பொருட்டு உங்கள் ஒத்துழைப்பினை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

அறிவழகன் திரைப்பட இயக்குநர்.

கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி..! இந்தியாவில் நடைபெறும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி!

எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்களை இரண்டாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவினர் பார்சிலோ... மேலும் பார்க்க

எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு..! தாயாகும் நடிகை கியாரா அத்வானி!

நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். 201இல் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி பிரபலமானார். அர்ஜூன் ரெட்... மேலும் பார்க்க

ஸ்வீட்ஹார்ட் பட டிரைலர்..!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஸ்வீட்ஹார்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன்... மேலும் பார்க்க

ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!

பிரபல டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பு லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்கள் பெயா்களை... மேலும் பார்க்க

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28-02-2025வெள்ளிக்கிழமைமேஷம்இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேர... மேலும் பார்க்க

அரையிறுதியில் அலியாசிமே

துபை: துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே அரையிறுதிக்கு முன்னேறினாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் 6-4, 3-6, 6-2 என்ற செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்த... மேலும் பார்க்க