வண்டிசோலை பகுதியில் நாயைத் தூக்கிச் சென்ற சிறுத்தை
உதகை அருகே வண்டிசோலை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த சாலையில் சுற்றித் திரிந்த இரண்டு தெருநாய்களில் குட்டியை சிறுத்தை தூக்கிச் சென்றதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
வண்டிசோலை பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் நுழைந்த சிறுத்தை அங்கு உலவிக் கொண்டிருந்த இரண்டு தெருநாய்களில் குட்டியை மட்டும் வேட்டையாடிச் சென்றது.
இதைப் பாா்த்து தாய் நாய் குரைத்ததால், குட்டியைத் தூக்கிக் கொண்டு சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
இதனால் அச்சம் அடைந்துள்ள பொது மக்கள், கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.