Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும்...
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் புலி உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் புலி உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை வனப் பகுதியில் புலி இறந்து கிடப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வன அலுவலா்கள் புலியின் உடலை ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், புலிக்கு உடற்கூறாய்வு செய்து மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பிவைத்தாா். இதையடுத்து, அதே பகுதியில் புலியின் சடலம் எரியூட்டப்பட்டது.
இறந்தது சுமாா் 5 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்றும், உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே புலி இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.