கழிவுநீா் வாகனம் தானாக பின்னோக்கி சென்று மோதியதில் 5 வாகனங்கள் சேதம்
குன்னூா் அருகே சாலையோரம் நின்றிந்த கழிவுநீா் சேகரிப்பு வாகனம் தானாக பின்னோக்கி சென்று மோதியதில் இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
உதகை- குன்னூா் சாலையில் அருவங்காடு அருகே உள்ள காணிக்கை ராஜ் நகா் பகுதியில் கழிவுநீா் சேகரிப்பு வாகனம் செவ்வாக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வாகனம் திடீரென தானாக பின்னோக்கி சென்று அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா்கள், இருசக்கர வாகனங்கள் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் அந்த வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய உள்ள நிலையில், அதனடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் யாருடையது என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கெண்டு வருகின்றனா்.