செய்திகள் :

Rohit Sharma : '11 பேரும் ஃபார்ம்ல இருக்கோம்!'- ரோஹித் மகிழ்ச்சி!

post image

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் கோலி மிகச்சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ``கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி உறுதியில்லை என்பதுதான் இந்தப் போட்டியின் சுவாரஸ்யம். பாதி போட்டி முடிந்தபோது இது ரொம்பவே நல்ல ஸ்கோராக தெரிந்தது. நாங்கள் ரொம்பவே சிறப்பாக ஆடினால்தான் வெல்ல முடியும் என தோன்றியது.

சேஸிங்கை நாங்கள் ரொம்பவே பக்குவமாகவும் நிதானமாகவும் அணுகினோம் என நினைக்கிறோம். இங்கேயுள்ள பிட்ச்களில் ஒருவித சீரற்ற தன்மை இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய பிட்ச்சை விட இந்த பிட்ச் கொஞ்சம் நன்றாக இருந்தது.

பிட்ச் கொஞ்சம் சீரற்று இருப்பதால் பேட்டிங் ஆடும் சீனியர்களிடமே எப்படி ஆட வேண்டும் என்கிற முடிவையும் விட்டுவிட்டோம். 6 பௌலிங் ஆப்சன்கள் இருந்ததும் நம்பர் 8 வரை பேட்டிங் இருந்ததும் அற்புதமான விஷயம்.

கோலி இதேமாதிரியான பணியை அணிக்காக பல ஆண்டுகளாக செய்து கொடுத்திருக்கிறார். எங்களுக்கு தேவைப்பட்ட பெரிய பார்ட்னர்ஷிப்பை கோலியும் ஸ்ரேயாஷ் ஐயரும் கொடுத்துவிட்டார்கள். இறுதிப்போட்டியில் ஆட நினைத்தால் நம்முடைய எல்லா வீரர்களும் ஃபார்மில் இருக்க வேண்டும்.

அப்படியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையையும் கொடுக்கிறது. தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் மிகச்சிறந்த அணிகள். நாளை எங்களுக்கு விடுமுறை. அந்தப் போட்டியை பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கப்போவதில்லை. வீரர்கள் தங்களை இலகுவாக்கிக் கொள்ள நாளைய தினம் பயன்படும்" என்றார்.

Rohit Sharma : 'ஐ.சி.சி தொடர்களில் ஆஸி பலமான அணிதான்; ஆனால்..!' - சவாலை எதிர்நோக்கும் ரோஹித் சர்மா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்து முடிந்திருந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற நிலையில், அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ... மேலும் பார்க்க

Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வான்டேஜ் - உண்மை என்ன?

சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமே துபாயில் ஒரே மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற அணிகள் பாகிஸ்தானில் ... மேலும் பார்க்க

AusvAfg: 'மீண்டும் அசத்திய ஒமர்சாய்; ஆஸிக்கு நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்’ - வரலாறு படைக்குமா ஆப்கன்?

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான முக்கியமான போட்டி நடந்து வருகிறது. லாகூரில் நடந்து வரும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை எடுத... மேலும் பார்க்க

Champions Trophy: 'தீவிரவாத அச்சுறுத்தல்; உளவுத்துறை தகவல்' - பாதுகாப்பைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சில தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போட்டிகளுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

IndvPak : 'ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்கக்கூடாது' - கேம்ப்ளான் பகிர்ந்த கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி சத... மேலும் பார்க்க

PAK v IND: `சதமடித்த கோலி; மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்' - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி நோக்கி இந்தியா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கோலியின் சதத்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் மிரட்டலான ஆட்டத்தாலும் இந்திய அணி எளிதில்... மேலும் பார்க்க