இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!
Rohit Sharma : 'ஐ.சி.சி தொடர்களில் ஆஸி பலமான அணிதான்; ஆனால்..!' - சவாலை எதிர்நோக்கும் ரோஹித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்து முடிந்திருந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற நிலையில், அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா அரையிறுதி பற்றியும் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, 'ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணி சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறந்த அணி. நல்ல ரிசல்ட் பெறுவது மிகவும் முக்கியமானது. அதற்காக நாங்கள் சரியான ஆட்டத்தை விளையாடினோம்.
இந்திய அணி 30 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்த சமயத்தில் ஒரு மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது என்பது முக்கியம். அந்தப் பார்ட்னர்ஷிப்பினால் தான் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவோம் என்று நினைத்தேன். அந்த ஸ்கோரை எட்டும் தரம் எங்களிடம் உள்ளது.
வருண் சக்கரவர்த்தியிடம் ஏதோ ஒரு புதிய மாற்றம் உள்ளது. எனவே அவரால் என்ன வழங்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் அடுத்தடுத்த ஆட்டத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுவதும், குறுகிய நேரத்தில் போட்டித் தன்மையுடன் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதும் மிகவும் முக்கியம். அணி மேலே செல்கிறதா அல்லது கீழே செல்கிறதா என்பதை விட தவறுகளை விரைவாக சரி செய்வது மிகவும் அவசியம்.

ஆஸ்திரேலியா அணி ஐசிசி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் எங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த ஆட்டத்தை கொடுக்க உள்ளோம். இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும் எனவே அதனை எதிர்நோக்குகிறோம்.' என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
