செய்திகள் :

PAK v IND: `சதமடித்த கோலி; மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்' - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி நோக்கி இந்தியா

post image
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கோலியின் சதத்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் மிரட்டலான ஆட்டத்தாலும் இந்திய அணி எளிதில் டார்கெட்டை சேஸ் செய்து முடித்திருக்கிறது.
IndvPak

டாஸ் வென்ற பாகிஸ்தான்

பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான்தான் டாஸை வென்றார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாகவும் அறிவித்தார். வங்கதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் 220+ டார்கெட்டை சேஸ் செய்யவே இந்திய அணி 46 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டது. போட்டி செல்ல செல்ல பிட்ச் மந்தமாவதை உணர முடிந்தது. மேலும், துபாயில் காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இல்லை என்று இந்திய அணியின் துணை கேப்டன் கில் பேசியிருந்தார். இந்த காரணங்களால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்திருக்கக் கூடும்.

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஷமியும் ஹர்ஷித் ராணாவும் முதல் ஸ்பெல்லை வீசினர். இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் ஓப்பனர்கள். அரவுண்ட் தி விக்கெட்டில் வந்து முதல் ஓவரை இமாமுக்கு வீச ஷமி கொஞ்சம் சிரமமே பட்டிருந்தார். அந்த ஓவரில் மட்டும் 5 ஒயிடுகள். மேலும், ஐந்தாவது ஓவரை வீசுகையில் முழங்காலில் அசௌகரியத்தை உணர்ந்தவர் பெவிலியனுக்கும் திரும்பினார். இதனால் முதல் ஸ்பெல் கொஞ்சம் சீக்கிரமாகவே முடிந்தது.

ஹர்திக் பாண்ட்யா பந்தை கையில் எடுத்தார். இமாமும் பாபரும் நின்று நிதானமாக ஆடும் மனநிலையிலேயே இருந்தனர். பாபருக்கு பந்து சரியாக கனெக்ட்டும் ஆகவில்லை. இப்படியொரு நிலையில் அவர் 23 ரன்களில் இருந்த போது ஹர்திக்கை ட்ரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆகி ராகுலிடம் கேட்ச் ஆனார். அவர் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே இமாம் உல் ஹக்கும் ரன்னே இல்லாத இடத்தில் ரன் ஓட முயன்று அக்சர் படேலால் டைரக்ட் ஹிட்டாக அவுட் ஆக்கப்பட்டார்.

ரிஸ்வான் - சகீல் கூட்டணியின் ஆட்டம்:

இமாம் உல் ஹக் 10 ரன்கள் அடித்திருந்தார். இமாம் உல் ஹக்கையும் இன்சமாம் உல் ஹக்கையும் ரன் ஓடுவதில் ஒப்பிட்டு ரவி சாஸ்திரியும் கவாஸ்கரும் நகைச்சுவை செய்துகொண்டிருந்தனர்.

47-2 என பாகிஸ்தான் திணறிய போது ரிஸ்வானும் சவுத் சகீலும் கூட்டணி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி ரொம்பவே நிதானமாக ஆடியது. அக்சர், ஜடேஜா, குல்தீப் இந்திய ஸ்பின் பட்டாளத்துக்கு எதிராக நிறைய டாட்களை ஆடி கொஞ்சம் நேரம் களத்தில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய ஆரம்பித்தனர். ஏதுவான பந்துகளை பவுண்டரி ஆக்கினர். நிதானமான ஆட்டத்தால் இந்த பார்ட்னர்ஷி 100 ரன்களைக் கடந்தது. ரொம்பவே நிதானமாக ஆடிக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் கியரை மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது இருவருமே சிக்கிக்கொண்டனர். அக்சரின் பந்தில் இறங்கி வந்து பெரிய ஷாட்டை ஆட முயன்று ரிஸ்வான் 46 ரன்களில் போல்டை பறிகொடுத்தார். கொஞ்ச நேரத்திலேயே சவுத் சகீல் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஹர்திக்கின் பந்தில் அக்சரிடம் 62 ரன்களில் கேட்ச் ஆனார். திடகாத்திரம் இல்லாத லோயர் மிடில் ஆர்டரை வைத்திருக்கையில் இருவருமே இன்னும் கொஞ்சம் நேரம் நின்று ஆடியிருக்க வேண்டும். மேலும், இருவருக்குமே இந்திய வீரர்கள் கேட்ச் ட்ராப்களை செய்திருந்தனர். அந்த வாய்ப்பையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

சரணடைய வைத்த இந்திய ஸ்பின்னர்கள்!

இந்திய ஸ்பின்னர்கள் பேட்டர்களுக்கு இடம் கொடுக்காமல் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக டைட்டாக வீசி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் பேட்டர்கள் ரொம்பவே திணறினர். சல்மான் ஆகாவையும் ஷாகின் ஷா அப்ரிடியையும் அடுத்தடுத்த பந்துகளில் குல்தீப் வீழ்த்திக்கொடுத்தார். தயாப் தாஹீரை ஜடேஜா போல்ட் ஆக்கினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது. ஆயினும், கடைசியில் குஷ்தில் ஷா அதிரடியாக ஆடினார். இன்னிங்ஸின் முதல் சிக்சரையும் அவர்தான் அடித்திருந்தார். ஷமியின் 49 வது ஓவரிலும் பெரிய சிக்சரை பறக்கவிட்டார். ஹர்ஷித் ராணாவின் கடைசி ஓவரில் 38 ரன்களில் அவரும் அவுட் ஆக பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்திய அணி 242 ரன்களை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது. ரோஹித்தும் கில்லும் ஓப்பனிங் வந்தார்கள். இந்த பிட்ச்சில் போகப் போக ரன்கள் அடிக்க சிரமமாக இருக்கிறதென்பதால் முதல் 10 ஓவர்களுக்குள் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் ஆடினர்.

சேஸிங்கைத் தொடங்கிய இந்தியா!

ரோஹித் ஷாகின் ஷா அப்ரிடி, நஸீம் ஷா என இருவரையும் அட்டாக் செய்து ஆடினார். ஆனால், 20 ரன்களில் இருந்த போது ஷாகீன் ஷா வீசிய ஒரு பயங்கரமான யார்க்கரில் போல்டை பறிகொடுத்து வெளியேறினார் ரோஹித். பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கில்லும் 46 ரன்களில் அப்ராரின் பந்தில் அவுட் ஆனார். லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி டாப் ஆப் ஸ்டம்பை தூக்கிய சிறப்பான பந்தை அப்ரார் வீசியிருந்தார். இந்திய அணி கொஞ்சம் சறுக்கையில் கோலியும் ஸ்ரேயாஸ் ஐயரும் கூட்டணி சேர்ந்தனர். இருவருமே மிகச்சிறப்பாக ஆடினர்.

கடந்த போட்டியைப் போல அல்லாமல் இந்தப் போட்டியில் Run a Ball இல் ஆட வேண்டும் என்பதில் கோலி தெளிவாக இருந்தார். டாட்கள் ஆடினாலும் அதை ஈடுகட்டும் வகையில் வேகமாக ஓடி ரன்களை சேர்த்தார். ஏதுவான பந்துகளில் பவுண்டரிக்களையும் அடித்துக் கொண்டே இருந்தார். குறிப்பாக, ஹரீஸ் ராப் வீசிய 13வது ஓவரில் ட்ரைவ் ஆடி இரண்டு பவுண்டரிக்களை அடித்திருந்தார். அந்த இரண்டு ஷாட்களும் அத்தனை க்ளாஸ். அந்த ஷாட்களை பார்த்தவுடன் தான் கோலியின் மீது நம்பிக்கையே வந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களை கோலி சிறப்பாக எதிர்கொள்ளவே ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார் ரிஸ்வான். ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி சமீபமாக சிறப்பாக ஆடுவதில்லை. அதனால் லெக் ஸ்பின்னரான அப்ராரை கோலிக்கு எதிரான ஆயுதமாக ரிஸ்வான் பயன்படுத்தினார். ஆனால், இந்த முறை கோலி சிக்கவில்லை. கோலியைச் சிக்கவைக்கும் வகையில் ரிஸ்வான் திட்டமும் தீட்டவில்லை. கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறுவார் எனத் தெரிந்தும் ஸ்லிப் இல்லாமல் வீச வைத்தார். இதையெல்லாம் ஒரு பெரிய இன்னிங்ஸை கட்டமைக்கவும் க்ரீஸில் கோலி பிழைத்து நிற்கவும் காரணமாகிவிட்டது.

ஸ்ரேயாஸ் ஐயர் வந்த பிறகு அவர் ஒரு பக்கம் ஸ்பின்னர்களை சிறப்பாக கையாண்டு கோலியின் மீதான அழுத்தத்தைக் குறைத்தார். நஸீம் ஷாதான் பார்மில் இருக்கும் பௌலர் என்பதால் அவரை கோலியின் விக்கெட்டை எடுக்க அதிக ஓவர்கள் வீச வைத்தார் ரிஸ்வான். ஆனால், நஸீம் ஷாவின் ஓவரில் கவர்ஸ் பீல்டரின் தலைக்கு மேல் பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார்.

கோலியின் பவுண்டரிக்கள் பிரமாதமாக இருந்தாலும் அதைக் கடந்து அவர் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய ஓடி, ஓடி ரன் எடுத்த விதம்தான் இந்த சதத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அடித்த 100 ரன்களில் 72 ரன்களை ஓடி ஓடி தான் எடுத்திருந்தார். 'கோலி பார்மில் இருக்கிறாரோ இல்லையோ நன்றாக ஆடுகிறாரோ இல்லையோ, ஆனால் க்ரீஸூக்கு இடையே ஓடி, ஓடி ரன்கள் சேர்ப்பதில் மட்டும் அவர் சுணங்கியதே இல்லை' என ஹர்ஷா போக்ளே வர்ணனையில் பாராட்டினார். அந்த Running Between the Wicket திறன் தான் கோலிக்கு இந்த சதத்தையே கொடுத்தது.

Shreyas

கோலி எந்தளவுக்குச் சிறப்பாக ஆடினாரோ அதே அளவுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடியிருந்தார். அவர் 67 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்தார். ஸ்பின்னர்களை வழக்கம் போல மிக நேர்த்தியாக எதிர்கொண்டிருந்தார். அதேநேரத்தில் அவரின் வீக்னஸாக பார்க்கப்படும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் சமீபமாக மிகச்சிறப்பாக ஆடுகிறார். இந்தப் போட்டியிலும் மிரட்டிவிட்டார்.

Kohli

கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரின் ஆட்டத்தால்தான் இந்திய அணி இந்தப் போட்டியைச் சௌகரியமாக வென்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியையும் இந்திய அணி ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது.

Vikatan Whatsapp Channel

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

PAK v IND: "பாகிஸ்தானை வீழ்த்த 300 ரன்கள் போதும்..." - கில் சொல்லும் வின்னிங் சீக்ரெட் இதுதான்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை அந்த அணி இழக்கு... மேலும் பார்க்க

Kamalini : 'திரில்லிங் மேட்ச்... மும்பைக்காக வின்னிங் ஷாட் அடித்த தமிழக வீராங்கனை!

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதியிருந்தன. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை கமலினி அழுத்தமான ச... மேலும் பார்க்க

Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' - ஜாலி ரோஹித்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட... மேலும் பார்க்க

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' - எப்படி வென்றது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றி... மேலும் பார்க்க

IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' - வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.MI Matchesஇந்த சீசனின் முதல்... மேலும் பார்க்க

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' - WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகர... மேலும் பார்க்க