‘முதல்வா் மருந்தகம்’ திட்டத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
இந்திய அணி வெற்றிக்கு வாழ்த்து: முதல்வர் ஸ்டாலின்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துகள். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது.
இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா்.
போட்டியில் தற்போது தொடா்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
மறுபுறம், தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான், போட்டியிலிருந்து வெளியேறும் அச்சத்தில் இருக்கிறது.