செய்திகள் :

Kamalini : 'திரில்லிங் மேட்ச்... மும்பைக்காக வின்னிங் ஷாட் அடித்த தமிழக வீராங்கனை!

post image
வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று பெங்களூரு அணியும் மும்பை அணியும் மோதியிருந்தன. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை கமலினி அழுத்தமான சூழலில் வின்னிங் ஷாட் அடித்து வெல்ல வைத்தார்.
Kamalini

பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட் செய்து 167 ரன்களை எடுத்திருந்தது. எல்லிஸ் பெர்ரி 87 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். மும்பை அணியும் சேஸிங்கை தொடங்கியது. மும்பை அணி சார்பில் நட்சீவர் ப்ரண்ட்டும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பாக ஆடியிருந்தனர். நட்சீவர் ப்ரண்ட் அதிரடியாக 21 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் 38 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் நின்று போட்டியை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 3 ஓவர்களில் 24 ரன்கள் தேவை எனும் நிலையில் ஜார்ஜியா வாரெம் வீசிய 18 வது ஓவரில் ஹர்மன்ப்ரீத் கவுரும் சஜீவன் சஜானாவும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர்.

இதனால் மும்பையின் மீது அழுத்தம் கூடியது. அந்த சமயத்தில்தான் நம்பர் 8 வீராங்கனையாக கமலினி உள்ளே வந்தார். களத்தில் நின்ற அமன்ஜோத் கவுரும் சிறப்பாக ஆடினார். 19 வது ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட அமன்ஜோத் கவுர் போட்டியை நெருக்கமாக்கினார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கமலினி ஓடி ஓடி ரன்களை எடுக்க கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை எனும் நிலைக்கு போட்டி சென்றது. ஏக்தா பிஸ்தா வீசிய அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை இறங்கி வந்து கவர்ஸில் பவுண்டரியாக்கி மும்பையை வெல்ல வைத்தார் கமலினி.

Kamalini

கமலினியின் பெற்றோர்களும் மைதானத்தில் இருந்தனர். 16 வயதே ஆன தங்களின் மகள் சிறப்பாக ஆடியதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து துள்ளிக்குதித்தனர்.

Rohit Sharma : 'கேட்ச்சை விட்டதுக்கு தண்டனையா அக்சரை டின்னர் கூட்டிட்டு போறேன்' - ஜாலி ரோஹித்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட... மேலும் பார்க்க

BanvInd : 'ஏமாற்றிய கோலி; விடாமுயற்சியுடன் சதமடித்த கில்!' - எப்படி வென்றது இந்தியா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றி... மேலும் பார்க்க

IPL 2025 : 'CSK க்கு முதல் போட்டியே மும்பையோடு!' - வெளியானது ஐ.பி.எல் அட்டவணை!

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.MI Matchesஇந்த சீசனின் முதல்... மேலும் பார்க்க

WPL : 'ஆர்ப்பரிக்கும் 5 அணிகள்; களமிறங்கும் சிங்கப்பெண்கள்!' - WPL Season 3 முழு விவரம்

WPL Season 3இந்திய மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) 2025 போட்டிகள், பிப்ரவரி 14-ம் தேதி, அதாவது இன்று முதல் குஜராத் மாநிலத்திலுள்ள வதோதரா சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது. மும்பை, பெங்களூரு போன்ற நகர... மேலும் பார்க்க

Rajat Patidar : 'Unsold' வீரர் டு ஆர்சிபியின் கேப்டன்! - எப்படி சாதித்தார் ரஜத் பட்டிதர்?

ஐ.பி.எல் இல் ரஜத் பட்டிதரை தங்களின் புதிய கேப்டனாக அறிவித்திருக்கிறது பெங்களூரு அணி. ரஜத் பட்டிதர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் 'Unsold' ஆன வீரர். பெங்களூரு அணி கூட அவர் மீது விருப்... மேலும் பார்க்க

RCB : 'கப் ஜெயிக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுவோம்!' - ரஜத் பட்டிதர் உறுதி

பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்தியிருந்தார்கள். அறிவிப்புக்கு பின் பெங்களூரு அணியின் புதிய கேப்டன... மேலும் பார்க்க